Zoom the image with mouse
2
sold in last
8
hours
B01830
Rs. 390.00
இந்த நூல் 32 பத்திகளாகப் (அடிவைப்பு) பிரிக்கப்பட்டு, மிக எளிய பழகு தமிழில் விளக்கப்பட்டுள்ளது, மேய்ச்சலுக்குச் சென்ற தாய்ப்பசு கன்றின் ஞாபகம் வர மாலை நேரத்தில் விரைவாக கன்றிடம் ஒடி வருவது போல பாதுகையும் சித்திரகூடத்திலிருந்து ( ராமனிடமிருந்து) அயோத்திக்கு ஓடிவந்ததை படிக்கும்போது, மகாதேசிகரின் கற்பனைத்திறன் கண்டு வியக்கிறோம். ( பக்கம் 74). அயோத்தியை, பாதுகைகள் ஆண்ட போது ( பரதன் ஆண்ட 14 ஆண்டுகளில்) எந்த குழந்தையும் இறக்கவில்லை;...
customers are viewing this product

இந்த நூல் 32 பத்திகளாகப் (அடிவைப்பு) பிரிக்கப்பட்டு, மிக எளிய பழகு தமிழில் விளக்கப்பட்டுள்ளது,
மேய்ச்சலுக்குச் சென்ற தாய்ப்பசு கன்றின் ஞாபகம் வர மாலை நேரத்தில் விரைவாக கன்றிடம் ஒடி வருவது போல பாதுகையும் சித்திரகூடத்திலிருந்து ( ராமனிடமிருந்து) அயோத்திக்கு ஓடிவந்ததை படிக்கும்போது, மகாதேசிகரின் கற்பனைத்திறன் கண்டு வியக்கிறோம். ( பக்கம் 74). அயோத்தியை, பாதுகைகள் ஆண்ட போது ( பரதன் ஆண்ட 14 ஆண்டுகளில்) எந்த குழந்தையும் இறக்கவில்லை; பிராய்ச்சித்தம் தேடும் அளவிற்கு எவ்வித குற்றமும் நிகழவில்லை என்ற செய்தி ( பக்கம். 80 ) யை சுலோகம் 153ல் காணும்போது, தற்போது அந்த பாதுகைகள் ஆட்சி செய்யக்கூடாதா என்ற ஏக்கமே நமக்கு உண்டாகிறது. பாதுகைகள், சீதாதேவியால் வணங்கப்பட்டதற்கான காரணங்களை 229,230 சுலோக விளக்கவுரையில் படித்து மகிழலாம். ( பக்கம்.104 ) எல்லா விஷ்ணு ஆலங்களிலும் உள்ள விக்ரக வடிவங்களில் பாதுகையுடன் கூடிய எம்பெருமான் திருமேனியை காண இயலாது; ஆனால், திருவரங்கத்தில் மட்டும் பாதுகையுடன் கூடிய திருமேனியைக் காணலாம் என்ற செய்தியை, சுலோகம் 240ல் ( பக்கம்.107) படித்து ரசிக்கலாம்.